உக்ரைன், கொத்து குண்டுகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று கடந்த 20ம் நாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் நெடுநோக்கு ஒருங்கிணைப்பாளர் ஜோன் கொப்பி தெரிவித்துள்ளார்
இந்த தகவல் தங்களுக்கு கவலை அளிப்பதாக ஐ.நா பொது செயலாளரின் செய்தித்தொடர்பாளர் டியாலீக் 21ஆம் நாள் இது பற்றி குறிப்பிட்டார்.
இதற்கு முன், உக்ரைனில் உள்ள ஐ.நா மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் சவியனோ அப்ரெவு பேசுகையில், கொத்துக் குண்டுவெடிப்பினால், அப்பாவி மக்களின் மீது மாபெரும் தீங்கு ஏற்பட்டது என்று கூறினார்.
ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சஹாரோவா கூறுகையில்,
ரஷியா-உக்ரைன் மோதல் காலத்தை நீட்டிப்பதே, அமெரிக்காவின் இச்செயலின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.