உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 13ஆம் நாள், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான ச்சின்காங், சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஆப்கான் அண்டை நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் 4ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், தற்போதைய ஆப்கானிஸ்தான், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை மாற்றத்திற்கான முக்கிய காலத்தில் உள்ளது. சர்வதேச சமூகம் குறிப்பாக ஆப்கானின் அண்டை நாடுகள், இதில் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், பல்வேறு தரப்புகள் முந்தைய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டங்களின் சாதனைகளைச் செயல்படுத்தி, ஆப்கானின் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது பற்றியும், இப்பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தை முன்னேற்றுவது பற்றியும் பொதுக் கருத்தை எட்ட வேண்டும் என்று கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், முதலாவதாக, ஆப்கானிலுள்ள பயங்கரவாத சக்திகளை ஒடுக்க வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்க தரப்பு தனக்குரிய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். மூன்றாவதாக, ஆப்கான் தலிபான் சகிப்புத்தன்மையுடன் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும். நன்காவதாக, ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடைய பயனுள்ள ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதோடு, ஆப்கான் மறுசீரமைப்புக்குத் சீனா தொடர்ந்து இயன்ற அளவில் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.