இயற்கை எரிவாயு உற்பத்தியில் சாதனை படைத்த சீனா

சீனாவின் முதலாவது மிக ஆழ்கடல் எரிவாயு தளமான ஆழ்கடல் -1(Deep Sea No.1), பயன்பாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகள் ஆகின. கடந்த 2 ஆண்டுகளில், இத்தளத்தில் பெற்ற இயற்கை எரிவாயு உற்பத்தியளவு, 500 கோடி கனமீட்டரைத் தாண்டியுள்ளது.
சீனா தானாகக் கட்டியமைத்த உலகின் முதலாவது இலட்சம் டன் நிலை ஆழ்கடல் உற்பத்தி மற்றும் சேமிப்பு மேடை மூலம், இத்தளத்திலுள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி, தொடக்கத்தில் இருந்த 70 இலட்சம் கனமீட்டரிலிருந்து, தற்போதைய 1 கோடி கனமீட்டராக உயர்ந்துள்ளது. ஆழ்கடல் -1 தளத்தின் 2ஆவது கட்டத் திட்டப்பணிக்காக நீளமான எரிவாயு குழாய் அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது. 2ஆவது கட்ட திட்டப்பணி முடிவடைந்த பின், உச்சக்காலத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி அளவு, 450 கோடி கனமீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, சீனா, ஆழ்கடல் எரிவாயு மற்றும் எண்ணெயைக் கண்டுபிடித்து எடுக்கும் பணியை முன்னெடுத்து, எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி இணைப்பை ஆழ்கடலில் விரிவாக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author