பெங்களூரில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தற்போது கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது கடலின் நீர்மட்டம் உயர்வதால் சென்னை, மங்களூரு, பரதீப், யானம், உடுப்பி, பூரி, பனாஜி, ஹல்டியா, கோழிக்கோடு, விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 15 நவரங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் சென்னை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வில் 2040 ஆம் ஆண்டுகள் சென்னையின் நிலப்பரப்பில் 7 சதவீதம் கடல் நீர்மட்டதினால் மூழ்கிவிடும் என்று தெரியவந்துள்ளது.
இதேபோன்று 2060 ஆம் ஆண்டுக்குள் சென்னையில் 9.65 சதவீதம் பகுதி கடலில் மூழ்கும் எனவும், 2100 ஆம் ஆண்டில் 16.9% பகுதி கடலில் மூழ்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை ஈரநிலம் மற்றும் துறைமுகம், மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு அரசின் நினைவுச் சின்னம், தீவுத்திடல், அடையார் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவைகள் மிகவும் ஆபத்தான பகுதிகளாக அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் 2040 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கடலில் மூழ்கும் என்றும், கன்னியாகுமரி 2100 ஆம் ஆண்டுக்குள் 74.7 சென்டிமீட்டர் வரை கடல் நீர்மட்டம் உயரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் ஒவ்வொரு வருடமும் 3.1 மில்லிமீட்டர் அளவுக்கு கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.