தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
கடந்த இரண்டு நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று தமிழகத்தில் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.