சீன ஊடகக் குழுமமும் ஐ.நா சுற்றுலா அமைப்பும் ஜூலை 29ஆம் நாள் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டு, பண்பாடு மற்றும் சுற்றுலா செய்திகள் வெளியீடு, சுற்றுலா சின்னங்களின் பரவல், ஊடக நிகழ்வு உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகள் குறித்து உடன்பாட்டை எட்டின.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீன ஊடகக் குழுமம் பல மொழிகளிலான தகவல் பரவல் மேம்பாட்டை வெளிக்கொணர்ந்து, ஐ.நா சுற்றுலா அமைப்புடன் பயன்மிக்க ஒத்துழைப்பு மேற்கொண்டு, சுற்றுலா துறையின் வளர்ச்சி பற்றி தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு, பண்பாடு மற்றும் சுற்றுலாவைக் கருப்பொருளாக கொண்ட அம்சங்களின் படைப்பு மற்றும் பரவலைப் பெரிதும் மேற்கொண்டுள்ளது. ஒத்துழைப்புக் குறிப்பாணையில் கையொப்பமிட்டதை வாய்ப்பாக கொண்டு, இரு தரப்புகளின் நெருக்கமான ஒத்துழைப்பை முன்னேற்றி, பன்னாடுகளின் சுற்றுலா பரிமாற்றத்தைத் தூண்டுவதில் ஐ.நா சுற்றுலா அமைப்பின் நம்பகத்தக்க கூட்டாளியாக மாற சீன ஊடகக் குழுமம் விரும்புவதாக தெரிவித்தார்.
1975ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் நிறுவப்பட்ட ஐ.நா சுற்றுலா அமைப்பின் தலைமையகம் ஸ்பெயினின் மாட்ரிட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.