சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 3ஆம் நாள் பிற்பகல் அஸ்தானாவில் உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர் மிர்ஜியோயேவைச் சந்தித்துரையாடினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில் இவ்வாண்டு ஜனவரி திங்கள் நீங்கள் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட போது, சீன-உஸ்பெகிஸ்தான் உறவை, புதிய யுகத்தில் முழு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்துவதென ஒருமனதாக தீர்மானித்தோம் என்றும், இரு நாட்டுறவின் வளர்ச்சி புதிய காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில் இவ்வாண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். சீன நவீனமயமாக்கத்தை சீனா விரைவாக முன்னேற்றி வருகிறது. உஸ்பெகிஸ்தான்-2030 என்ற நெடுநோக்கு திட்டத்தை உஸ்பெகிஸ்தான் பன்முகங்களிலும் முன்னேற்றி வருகிறது.
உஸ்பெகிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டுறவின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரம், அரசுரிமை மற்றும் பாதுகாப்பைப் உஸ்பெகிஸ்தான் பேணிக்காப்பதைச் சீனா உறுதியுடன் ஆதரித்து, எப்போதும் உஸ்பெகிஸ்தானின் நம்பகமான நண்பர் மற்றும் கூட்டாளியாக இருக்கும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.