இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தபால் துறையில் RD திட்டத்தின் கீழ் மாதம் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.
கூட்டு வட்டியின் நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றது. முதலீட்டைப் பொறுத்து லாப கணக்குகள் மாறுபடுகின்றன.
உதாரணமாக மாதம் ஏழாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகள் முதலீடாக 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருக்கும். இதில் வட்டி 6.7 சதவீதம் சேர்த்தால் முதிர்வு காலத்தில் 4,99,564 ரூபாய் கிடைக்கும். அதனை அப்படியே மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தால் மொத்தம் 11,95,982 ரூபாய் கிடைக்கும்