ஒலிம்பிக்கில் பங்கேற்ற சீன வீரர்களுக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வாழ்த்து

Estimated read time 1 min read

33 வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன விளையாட்டு வீரர்கள் கடுமையாகவும், விடாமுயற்சியுடனும் போராடி, 40 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 24 வெண்கலப் பதக்கங்களை வென்று, தாய்நாட்டிற்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளன.

புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் வழிகாட்டுதலில் ஊன்றி நின்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 2வது மற்றும் 3ஆவது முழு அமர்வில் எழுச்சியை ஆழமாகச் செயல்படுத்தி,  விளையாட்டு சக்தியை உருவாக்குவதற்கான இலக்கை உறுதியாக கட்டியெழுப்பி, சீனப் பாணி நவீனமயமாக்கத்துடன் வல்லரசு கட்டுமானத்தையும் தேசிய இன மறுமலர்ச்சியையும் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் விருப்பம் தெரிவித்தன.

 

Please follow and like us:

You May Also Like

More From Author