பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதிக் குழு 11ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் 10ஆம் நாள் வரை, பிரதிநிதிக் குழுவில் 405 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 35 போட்டிகளில் கலந்துகொண்ட விளையாட்டுகளைச் சேர்ந்த 151 வீரர்கள் ஒட்டுமொத்தமாக 214 முறை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்த எண்ணிக்கை, 230 ஆக இருந்தது. ஊக்கமருந்து எடுக்காத சீன வீரர்கள் மற்றும் சீனாவின் ஊக்கமருந்து எதிர்ப்புப் பணியை சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு ஏற்றுக்கொண்டதாக இப்பிரதிநிதிக் குழுவின் துணைத் தலைவர் லியூ கோ யொ இதில் எடுத்துக்கூறினார்.
சீனாவின் ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புமுறை, உலகில் முன்னணியில் உள்ளது. சீனாவின் ஊக்கமருந்த எதிர்ப்புப் பணி, உலகின் முன்மாதிரியாக விளங்குகிறது என்று உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் தலைவர் பான்கா Banka தெரிவித்தார்.