சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் சுதந்திர தின விழாவில் அதே விலை நீடிக்கிறது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 6555 ஆகவும், ஒரு சவரன் 52,440 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோன்று 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலையிலும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 5370 ரூபாய்க்கும், ஒரு சவரன் 42960 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
மேலும் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.88.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,500 ஆகவும் இருக்கிறது.