துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டுக்கான மன்றக் கூட்டத்துக்காக சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 12ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் அவர் கூறுகையில், இந்த ஆண்டு துர்க்மெனிஸ்தானால் முன்மொழியப்பட்டு ஐ.நா. பொது பேரவையினால் நிறுவப்பட்ட சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டையும், துர்க்மெனிஸ்தான் நிரந்தர நடுநிலையைப் பெற்றதற்கான 30வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது என்று தெரிவித்தார். துர்க்மெனிஸ்தானின் நிரந்தர நடுநிலை கொள்கையை சீனா உறுதியாக ஆதரிக்கிறது என்றும், சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதிலும் பல்வேறு நாடுகளிடையே கூட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் துர்க்மெனிஸ்தானின் முயற்சிகளைப் பாராட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
