இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
எதிர்காலத்தில் கடுமையான ‘நிலத்தில் புதைவு’ (subsidence) அபாயங்களை இந்த நகரம் எதிர்கொண்டுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தலைநகரின் சில பகுதிகள் விரைவில் கடலுக்குள் காணாமல் போகலாம். ஜகார்த்தா, ஒவ்வொரு ஆண்டும் 1 செமீ முதல் 15 செமீ வரை நிலத்தில் புதைகிறது.
இது, ஆண்டுக்கு சுமார் 0.08 அங்குலங்கள் மட்டுமே புதையும் வெனிஸ் நகரத்தின் வீதத்தை விடப் பல மடங்கு அதிகம்.
தற்போது, ஜகார்த்தாவின் சுமார் 40% பகுதி கடலின் மட்டத்திற்குக் கீழே உள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவது ஏன்?
