சீனாவின் நான்ஜிங்கில் 1937ஆம் ஆண்டில் நிகழ்ந்த படுகொலைகளில் மரணமடைந்தோருக்கான 12ஆவது தேசிய நினைவுதினம் தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவொ ஜியாகுன் 12ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டு நான்ஜிங் படுகொலை நிகழ்ந்த 88ஆவது ஆண்டு நிறைவாகும். இதை முன்னிட்டு சீனத் தேசிய மக்கள் பேரவையின் சட்டத்தீர்மானத்துக்கு இணங்க, நாட்டின் தேசிய நினைவேந்தல் நிகழ்வு வழக்கமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், இது ஜப்பானிய இராணுவ வெறியர்களால் செய்யப்பட்ட கொடூரமான குற்றமாகும். இதில், 3இலட்சம் சீனர்கள் படுகொலை செய்யப்பட்டது மனித வரலாற்றில் மிகவும் இரண்ட பகுதியாக மாறியது என்று தெரிவித்தார்.
இதனால், ஜப்பானின் வலது சாரி சக்திகள் வரலாற்று சக்கரம் பின்னோக்கி நகர நாங்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டோம், வெளிப்புற சக்திகள் சீனாவின் தைவானில் தலையீடு செய்ய அனுமதிக்க மாட்டோம், ஜப்பானிய இராணுவ வெறி மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
