நாடு முழுவதும் இன்று பந்த் போராட்டம்.‌.‌.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!! 

Estimated read time 0 min read

நாடு முழுவதும் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த் நடைபெற இருக்கிறது.

அதாவது எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த போராட்டத்திற்கு விசிக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தின் போது வன்முறைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வண்ணமாக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படாது.

இந்த போராட்டத்தை முன்னிட்டு இன்று நாட்டில் வன்முறைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author