சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 10ஆம் நாள், ஹேபெய் மாநிலத்தின் சியோங்ஆன் புதிய பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியின் உயர் வரையறை மற்றும் தரமுள்ள கட்டுமானக் கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
சீனத் தலைநகரான பெய்ஜிங்கின் பங்கிற்கு அவசியமற்ற செயல்பாடுகளிலிருந்து, அதனை விடுவிக்கும் வகையில், 2017ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சியோங்ஆன் புதிய பகுதியை அமைக்க, சீனா முடிவெடுத்தது.
நுண்ணறிவு, பசுமை, புத்தாக்கம் ஆகியவற்றைச் சின்னமாகக் கொண்ட சியோங்ஆன், சீன நவீனமயமாக்கத்தின் முன்மாதிரியாக மட்டுமல்லாமல், அதிக வேலை வாய்ப்புகள் உடைய, வசிப்பதற்கு உகந்த மக்களின் நகராகவும் திகழ்கிறது.
ஷிச்சின்பிங் இக்கலந்துரையால் கூட்டத்தில் கூறுகையில், புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை முன்னெடுத்து, சியோங்ஆனில் பல்வேறு முன்மாதிரி திட்டப்பணிகளின் செயலாக்கத்தை முன்னேற்ற வேண்டும். முதல் தர வணிகச் சூழலை உருவாக்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை, சியோங்ஆன் வளர்ச்சிக்கு ஈர்க்கப் பாடுபட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.