ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை  

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடிகள் அதிகரித்து வருவதாக புகார்கள் வருகின்றன.
மோசடிகள் போலி லாட்டரி வெற்றி எனத் தொடங்கி, வங்கி கணக்கை முடக்குவதாக அச்சுறுத்தலை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நூதன முறைகளை பின்பற்றுகின்றனர்.
இதற்கான போலியான ஆர்பிஐ லெட்டர்ஹெட்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாது சிறு மற்றும் நடுத்தர வணிகங்களும் இந்த மோசடிக்கு பலியாகும் போக்கு அதிகரித்து வருகிறது.
இவை தவிர கொரோனா தொடங்கியது முதல் வேரூன்றியுள்ள அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் செயலிகளின் மோசடிகளும் தொடர்கின்றன.

You May Also Like

More From Author