வெனிசூலா நாட்டு அரசின் அழைப்புக்கிணங்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு தூதரும், தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணை தலைவருமான வாங் டுங் மிங், ஜனவரி 10ம் நாள் அந்நாட்டுத் தலைநகர் ஹுன்டுரஸில் நடைபெற்ற அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார். வெனிசூலா அரசுத் தலைவர் மடுரோவுக்கு ஷிச்சின்பிங்கின் வணக்கம் மற்றும் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற மடுரோவுக்கு வாழ்த்து தெரிவித்த வாங் டுங் மிங் கூறுகையில், 2023ம் ஆண்டின் செப்டம்பரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், வெனிசூலா அரசுத் தலைவர் மடுரோவுடன், இரு நாட்டுறவை முழு நேர நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்துவதாக அறிவித்தார்.
வெனிசூலாவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைத் தொடர்ந்து செயல்படுத்தி, பாரம்பரிய நட்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவை இடைவிடாமல் முன்னேறுவதைத் தூண்டி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.