பங்களாதேஷின் 8 மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
பங்களாதேஷில் உள்ள ஜகன்னாத் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளில், பங்காளதேஷிற்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் தும்பூர் மற்றும் கசல்டோபா அணைகளின் ஸ்லூஸ் கேட்களை இந்தியா திறந்ததன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டது என்று தெரிவித்திருந்தனர்.
இந்த கூற்றுக்கள் உண்மையில் தவறானவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
திரிபுரா மற்றும் பங்களாதேஷ் வழியாக பாயும் கும்டி ஆற்றில் உள்ள இந்திய பகுதிகளில் உள்ள அணையில் இருந்து வெளியேறும் தண்ணீருக்கு பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு தொடர்பு இல்லை என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.