காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு  

Estimated read time 1 min read

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை போன்ற விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டியில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்த ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும்.

Please follow and like us:

You May Also Like

More From Author