சிறப்பு TET தேர்வு முடிவு எப்போது வெளியாகும்?- அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் 3.28 லட்சம் ஆசிரியர்கள்

Estimated read time 1 min read

சிறப்பு TET முடிவுகள் ஏன் இன்னும் வெளியாகவில்லை? என்பதே 3.28 லட்சம் ஆசிரியர்களின் கேள்வியாக உள்ளது.

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு TET ஜூலை 4, 5ல் நடைபெற்றது. தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டதால், முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டது. தடையை நீக்கி முடிவுகளை வெளியிட அனுமதிக்க தமிழக அரசு கோரியது. தடை இன்னும் நீக்கப்படாததால், முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் 3,28,701 ஆசிரியர்களின் TET தகுதி தொடர்பான நிலை கவலையாக உள்ளது.

ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய நிலையில், முடிவுகள் தாமதமாவது அடுத்தடுத்த தேர்வு வாய்ப்புகளையும் கால அவகாசத்தையும் பாதிக்கக்கூடும். தடை எப்போது நீங்கும், முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது தெளிவாகாத நிலையில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

You May Also Like

More From Author