பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்..!

Estimated read time 1 min read

உத்தர பிரதேசத்தின் பரேலியில் நடந்த நிகழ்ச்சி யில் பங்கேற்று பேசிய அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, : நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, பசுவின் இறைச்சியில் நோயும், அதன் பாலில் சத்துகளும் உள்ளன. பசு, பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு. அதன் இறைச்சியை உண்ணக்கூடாது.

மாறாக, அதன் பாலில் இருந்து நாம் பயனடைய வேண்டும் என்பதே நபிகள் நாயகத்தின் நோக்கமாக இருந்தது. இதை, முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் அளிப்பதுடன் நோய்வாய்ப்பட்டு உள்ளவர்களுக்கு அளித்தால் அவர்கள் குணமடைய உதவலாம். அமைதி, ஆரோக்கியம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், முaஸ்லிம்கள் பசுக்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். பசுவை பாதுகாக்க, அதை தேசிய விலங்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You May Also Like

More From Author