ஷென்செனில் ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்துக்கு 100% பசுமை மின்சார விநியோகம்

2026ஆம் ஆண்டின் ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் நவம்பர் 18, 19ஆகிய நாட்களில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டம் முழுமையாக பசுமை மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கும் என்றும், தொடர்புடைய அரங்குகளும் வசதிகளும் 100விழுக்காட்டு பசுமை மின்சார விநியோகத்தை அடைந்துள்ளன என்றும் சீன தெற்கு மின் கட்டமைப்பு நிறுவனம் 13ஆம் நாள் தெரிவித்தது.

இக்கூட்டத்தின்போது மின்சார விநியோகத்துக்கான பல்வேறு ஏற்பாட்டு பணிகளும் தயாராகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஷென்சென் மாநகரில் இக்கூட்டம் நடைபெறும் அனைத்து அரங்குகளிலும் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு அலகு மின்சாரத்திற்கும், அதன் மூல ஆதாரம்கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author