ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கனெக்டெட் மற்றும் தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருளுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தகத் துறை முன்மொழிய உள்ளது.
தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சீன நிறுவனங்களால் அமெரிக்க டிரைவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய தரவு சேகரிப்புக்கான சாத்தியம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
முன்மொழியப்பட்ட ஒழுங்குமுறை சீனாவில் இருந்து முக்கிய தகவல் தொடர்பு அல்லது தானியங்கி ஓட்டுநர் அமைப்பு மென்பொருள் அல்லது வன்பொருள் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதையும் விற்பனை செய்வதையும் தடை செய்யும்.
அமெரிக்க வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோ, கனெக்டெட் அமெரிக்க வாகனங்களில் சீன மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றால் ஏற்படும் குறிப்பிடத்தக்க அபாயங்களை முன்னரே எடுத்துரைத்தார்.
தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருளுக்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு
