நேபாள பிரதமர் வீட்டிற்கு தீ வைப்பு..!

Estimated read time 1 min read

நேபாள நாட்டில் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் 4-ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. நேபாள அரசின் சமூக வலைதள பேச்சுரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசின் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே இந்த நடவடிக்கை என அரசு விளக்கம் அளித்தாலும், தங்கள் கருத்துரிமையை பறிக்கவும், தணிக்கை நடவடிக்கையிலும் அரசு ஈடுபடுவதாக இளைஞர்கள் மத்தியில் அச்சம் பரவியது. மேலும் தங்கள் வியாபாரத்துக்காக சமூக வலைதளங்களை சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் அரசின் இந்த தடையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைப்போல வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் படிக்க சென்றுள்ள மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்றிருப்போரும் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே நேபாள அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் திட்டமிட்டனர். இதற்காக தடையில் சிக்காத டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும், மேலும் பல்வேறு வழிகள் வாயிலாகவும் ஏராளமானோரை திரட்டினர்.

பின்னர் பல்வேறு இடங்களில் இருந்து நேற்று தலைநகர் காட்மாண்டை நோக்கி பேரணியாக சென்றனர். அங்கே நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு முன்பு திரளாக குவிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தலைமுறையை குறிக்கும் ‘ஜென் சி’ என்ற பெயரிலான பதாகையை ஏந்திக்கொண்டு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சமூக வலைதள தடையை நீக்க வலியுறுத்திய அவர்கள், ஆளும் தலைவர்களின் ஊழலையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். நாட்டில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி தீவிரமாக போராடினர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்ல முயன்றனர். அங்கே வைக்கப்பட்டிருந்த தடைகளை அகற்றிக்கொண்டு உள்ளே செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துடன் பெரும் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பல்வேறு வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர்.பல இடங்களில் போலீசாரும், போராட்டக்காரர்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், ரப்பர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அடக்க முயன்றனர்.
ஆனால் நிலைமை கைமீறி போகவே வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்பு படையினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள சிவில் ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
எனினும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நேபாள அரசு இதுவரை வெளியிடவில்லை. பேராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தலைநகரில் ராணுவமும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளன. நேபாள பிரதமர் இல்லத்தை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமரின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
Please follow and like us:

You May Also Like

More From Author