மெரினாவில் 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..

Estimated read time 1 min read

விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் ( Drone) போன்று எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது.

இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author