சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 7ஆம் நாளில், ரியோ டி ஜெனிரோ நகரில், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் யிவெலா அம்மையாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
பல தரப்புவாதத்தையும் தாராள வர்த்தகத்தையும் சீனா எப்போதும் நடைமுறைப்படுத்தி பேணிக்காத்து வருகிறது. உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கும் சீனா தொடர்ந்து ஆதரவளித்து, வர்த்தக விதிகளை மேம்படுத்தி, உலக வர்த்தக அமைப்பின் 14ஆவது அமைச்சர்கள் கூட்டம் வெற்றிகரமாக நடத்துவதை சீனா முன்னேற்றும் என்றார்.
யிவெலா அம்மையார் கூறுகையில், வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு சீனா ஆதரவளித்து உதவி செய்வதற்கு உலக வர்த்தக அமைப்பு பாராட்டு தெரிவிக்கின்றது என்றார். மேலும், பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையில் சீனாவின் முக்கிய பங்குகளையும் அவர் வெகுவாக மதிப்பிட்டுள்ளார்.