விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

Estimated read time 0 min read

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

புனே மெட்ரோவின் பிங்க் வழித்தடத்தை தொடங்கி வைத்த பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, பண்டிகை காலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மஹாராஷ்டிராவில் நிலவும் வறட்சிக்கு மத்தியில், விவசாயிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், தீபாவளி கொண்டாட்டங்கள் விவசாயிகளின் வீடுகளையும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் விவசாயிகள் முக்கியப் பங்கு வகிப்பதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author