கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக தெற்கு ரயில்வே அறிவித்தப்படி, அக்டோபர் 12ஆம் தேதி 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்து திருவள்ளூர் அருகே ஏற்பட்டது, இதில் பாக்மதி விரைவு ரயில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதால் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முக்கியமாக, சென்னை சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்னை பினாகினி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அடங்கும்.
திருப்பதி-புதுச்சேரி (16111),
சென்னை-திருப்பதி (16203), சென்னை-திருப்பதி (16053),
அரக்கோணம்-புதுச்சேரி (16401),
கடப்பா-அரக்கோணம் (16402),
விஜயவாடா-சென்னை (12711), சூலூர்பேட்டை-நெல்லூர் (06745), சென்னை-திருப்பதி மெழு எக்ஸ்பிரஸ் (06727)
மேலும், சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, பல முக்கிய ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. விபத்து ஏற்பட்ட பகுதிகளில், சுமார் 15 மணி நேரம் வரை சீரமைப்பு பணிகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் விபத்தால் பயணிகள் பாதிக்கப்படாமல் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.