பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி பற்றிய பெங் லீயுவானின் கருத்து
பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்விக்கான யுனெஸ்கோவின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 16ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவியும், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வியை முன்னேற்றுவதற்கான யுனெஸ்கோவின் சிறப்புத் தூதருமான பெங் லீயுவான் அம்மையார் இதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி, பெண்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்ட அவர், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் ஆரோக்கியக் கல்வி, எண்ணியல் கல்வி, அறிவியல் கல்வி ஆகியவற்றை பல்வேறு தரப்புகளும் பெரிதும் முன்னேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
மேலும், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்விக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சீனாவின் பெண்களின் கல்வி சூழ்நிலையை மேம்படுத்தும் அதேவேளையில், உலகப் பெண்களின் கல்வி லட்சயத்தின் வளர்ச்சியையும் சீனா ஆக்கமுடன் முன்னேற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.