சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜார்டோவைச் சந்தித்துரையாடினார்.
ஐரோப்பிய-சீன உறவின் வளர்ச்சிக்கு ஹங்கேரி உறுதியாக ஆதரவளிக்குமென சிஜார்டோ கூறினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் தொலைநோக்கு வாய்ந்த தலைமையில், இரு நாட்டுறவு வரலாற்றிலேயே தலைசிறந்த காலத்தில் நுழைந்துள்ளது. ஐரோப்பியத் தரப்புகள் சீனாவைப் பகுத்தறிவுடன் அறிந்து கொள்வதையும் சீனா மீது ஆக்கப்பூர்வமான கொள்கைகளைப் பின்பற்றுவதையும் முன்னேற்றுவதில் ஹங்கேரி தொடர்ந்து பங்காற்ற வேண்டுமென சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.