ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினின் அழைப்பின் பேரில் , சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 22 முதல் 24ஆம் நாள் வரை பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது உச்சிமாட்டில் பங்கேற்க ரஷியாவின் கசான் நகருக்கு செல்ல உள்ளார்.
இந்தப் பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 18ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்
இவ்வாண்டு பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கம் அடைந்த பிறகு நடைபெறும் முதல் உச்சி மாநாடு, பன்னாட்டுச் சமூகத்தில் பரந்தப்பட்ட கவனத்தை ஈர்த்து வருகிறது.
பிரிக்ஸ் அமைப்பின் சிறிய மற்றும் பெரிய அளவிலான கூட்டங்களிலும், ‘பிரிக்ஸ் பிளஸ்’ நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையிலும் ஷிச்சின்பிங் பங்கேற்க உள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், பிரிக்ஸ் ஒத்துழைப்பை நிலையான மற்றும் நீண்ட வழிக்கு கொண்டு செல்லவும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் பல்வேறு தரப்புகளுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் மாவ் நிங் கூறினார்.