இவ்வாண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவாகும். கடந்த 75 ஆண்டுகளில், சீனப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சி அடைந்ததோடு, சீனாவும் உலகமும் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெற்று வருகின்றன.
சீனா, எப்போதும் தன்னை மனிதரின் வளர்ச்சி ஓட்டத்தில் வைத்து, உலகத்துடன் சீரான முறையில் பழகிக் கொண்டு, கூட்டு வளர்ச்சி பெற்று, உலகின் மேலாண்மை முறைமை, மேலும் நியாயமான திசையை நோக்கி முன்னேறுவதைத் தூண்டி வருகிறது.
சந்தையானது, மிக அரிதான மூலவளமாகும். தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி, உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உத்தரவாதமாகும். தற்போது, புதிய உயர் தர உற்பத்தி ஆற்றலை வளர்த்து வரும் சீனா, உலகத்துடன் ஆழமாகப் பரிமாறிக் கொண்ட போது மேலதிக புத்தாக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வளர்ச்சியை, உலகத்திலிருந்து பிரிக்க முடியாது. அது போல, உலகின் வளர்ச்சியையும், சீனாவிடமிருந்து பிரிக்க முடியாது என்பது, 75 ஆண்டுகளின் வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் தொடர்ந்து உறுதி செய்யப்படும்.
படம்:VCG