ஆசிய எண்ணியல் பொருளாதார அறிக்கையின் வெளியீடு பற்றிய கூட்டத்தை போஆவ் ஆசிய மன்றம் டிசம்பர் 21ஆம் நாள் நடத்தியது. இந்த அறிக்கையின்படி, உலகப் பொருளாதார மீட்சி பொதுவாக மந்தமாக இருக்கும் நிலையில், ஆசியா தொடர்ந்து பிரகாசமான இடமாகத் திகழ்கிறது.
இதில் எண்ணியல் பொருளாதாரம் ஆசியப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய இயக்காற்றலாகும்.
கணிப்பின்படி, 2022ஆம் ஆண்டில் ஆசியாவில் பிரதிநிதித்துவம் வாய்ந்த 14 பொருளாதார சமூகங்களின் எண்ணியல் பொருளாதார அளவு 12 லட்சத்து 80 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும்.
இத்துறையில் முதலிடம் பெற்ற சீனாவின் தொகை 7 லட்சத்து 47 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும். அதற்கு அடுத்து ஜப்பான் 2ஆவது இடத்தையும் தென் கொரியா 3ஆவது இடத்தையும் பிடித்தன. மேலும், இந்தியா, சௌதி அரேபியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இஸ்ரேல், மலேசியா ஆகிய நாடுகளின் எண்ணியல் பொருளாதார அளவு 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணியல் பொருளாதார வளர்ச்சியை முக்கிய இடத்தில் வைத்துள்ள சீனா, இவ்வளர்ச்சியை தேசிய நெடுநோக்குத் திட்டமாக உயர்த்தியுள்ளது. எண்ணியல் பொருளாதாரம் சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கிய இயக்காற்றாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுவதாக போஆவ் ஆசிய மன்றத்தின் தலைமைச் செயலாளர் லீ பாவ்டோங் தெரிவித்தார்.