சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தியத் தலைமையமைச்சர் மோடியுடன் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 23ஆம் நாள் பிற்பகல் கசானில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் இந்தியாவும், பண்டைய நாகரிக நாடுகளாகவும், வளர்ந்து வரும் பெரிய நாடுகளாகவும், உலகின் தென் பகுதியின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருக்கின்றன. இரு நாடுகள் தத்தமது நாட்டின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தில் உள்ள முக்கிய காலத்தில் உள்ளன. சீனாவும் இந்தியாவும் வரலாற்று பாதை மற்றும் இரு நாட்டுறவின் வளர்ச்சி திசையை சரியாக கருத்தில் கொள்வது, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு பொருந்தியதாக இருக்கின்றன. இரு தரப்புகள் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, முரண்பாடு மற்றும் கருத்து வேற்றுமையை சரியாக கையாண்டு, தத்தமது வளர்ச்சி கனவுகளை நனவாக்குவதற்கு உதவி அளிக்க வேண்டும். மேலும், இரு தரப்புகள் சர்வதேச கடமைகளுக்கு தோள் கொடுத்து, பரந்துபட்ட வளரும் நாடுகளின் கூட்டு சுய வலிமைக்கு முன்மாதிரியாக விளங்கி, உலகின் பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு பங்காற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author