சீன-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 

கூட்டத்தில் வாங்யீ கூறுகையில், சீனா ஆசியானுடன் சேர்ந்து அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி உள்ளிட்ட கொள்கைகளைக் கைப்பிடிக்க விரும்புகிறது என்றார். மேலும், இப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மேலும் நெருக்கமாக ஒத்துழைத்து, உறுதியான ஒற்றுமையுடன் இணைந்து, புதிய அறைகூவல்களையும் நிதானமற்ற தன்மையையும் சமாளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தென் சீனக் கடல் பிரச்சினை குறித்த சீனாவின் கொள்கை மற்றும் நிலைபாட்டையும் வாங்யீ விளக்கிக் கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஆசியான்-சீன பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 5 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள சாதனைகளை வெகுவாக மதிப்பிட்டனர்.

மத்திய கிழக்கு நிலைமையின் பரிணாமம் இப்பிரதேசத்திற்கு கொண்டு வரும் பாதிப்பைச் சமாளித்து, பிராந்திய எரியாற்றல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு அறிக்கை ஒன்றும் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சீன-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 22ஆம் நாள் பிலிப்பைன்சின் மணிலாவில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஆகிய இருவரும் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். ஆசியானின் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஆசியான் தலைமைச் செயலாளரும் இதில் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் வாங்யீ கூறுகையில், சீனா ஆசியானுடன் சேர்ந்து அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி உள்ளிட்ட கொள்கைகளைக் கைப்பிடிக்க விரும்புகிறது என்றார். மேலும், இப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மேலும் நெருக்கமாக ஒத்துழைத்து, உறுதியான ஒற்றுமையுடன் இணைந்து, புதிய அறைகூவல்களையும் நிதானமற்ற தன்மையையும் சமாளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தென் சீனக் கடல் பிரச்சினை குறித்த சீனாவின் கொள்கை மற்றும் நிலைபாட்டையும் வாங்யீ விளக்கிக் கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஆசியான்-சீன பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 5 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள சாதனைகளை வெகுவாக மதிப்பிட்டனர்.

மத்திய கிழக்கு நிலைமையின் பரிணாமம் இப்பிரதேசத்திற்கு கொண்டு வரும் பாதிப்பைச் சமாளித்து, பிராந்திய எரியாற்றல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு அறிக்கை ஒன்றும் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

You May Also Like

More From Author