தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளது.
இதனை முன்னிட்டு தற்போதே விசாலைக்கு தொண்டர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். இன்று காலை 7 மணி முதலே மாநாட்டு திடலுக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருப்பதால் அவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு திடீரென ஏராளமானோர் திரண்டதால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேர்கள் சேதமடைந்தது. தற்போது இருந்தே ஏராளமான தொண்டர்கள் வர தொடங்கியுள்ளதால் அந்த பகுதியே களைகட்ட தொடங்கி விட்டது. மேலும் முன்னதாக 10 மணிக்கு தான் மாநாடு திடல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொண்டர்களின் கூட்டத்தை பார்த்து முன்கூட்டியே திறந்து விட்டனர்.
மேலும் இன்று நடைபெறும் முதல் மாநாட்டில் 3 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.