கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படப்போவதாக கியூபெக் தேசியவாத கட்சி செவ்வாயன்று அறிவித்தது.
ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, நாடாளுமன்றத்தில் உள்ள 338 இடங்களில் 153 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
அதனால் எந்தவொரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றாலும் அவர்கள் மற்ற கட்சிகளை நம்பியுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விட ஜஸ்டின் ட்ரூடோ பின்தங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோவின் “நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் Yves-François Blanchet அறிவித்தார்.
லிபரல் கட்சியினர், மூத்தவர்களுக்கு முதுமைப் பாதுகாப்பை உயர்த்துவதற்கான Blanchet-இன் கோரிக்கையை மறுத்ததை அடுத்து இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.