தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) 8 மாவட்டங்களில், நாளை (அக்டோபர் 31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கேற்றாற் போல இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் கிழக்கு கடலோர பகுதிகளின் மீது, தென்மேற்கு அரபிக் கடலின் மேல் இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கனமழை; நாளையும் மழை உண்டு!
You May Also Like
More From Author
சீனாவின் மீது இணையத் தாக்குதல் நடத்தி வருகின்ற அமெரிக்கா
July 27, 2023
இராமேசுவரம் – காசி இலவச ஆன்மிகப் பயணத் திட்டம் அறிவிப்பு!
September 18, 2025
