சென்சோ-18 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலப் பணி வெற்றி

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, நவம்பர் 4ஆம் நாள் 1:24 மணியளவில் சென்சோ-18 விண்கலம், டோங்ஃபெங் தரையிறங்கும் தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சென்சோ-18 விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்களான யே குவாங்ஃபு, லீ சுங் மற்றும் லீ குவாங்சு ஆகியோர் நல்ல உடல் நிலையில் இருப்பதை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து சென்சோ-18 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலப் பணி, முழுமையான வெற்றியைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மூன்று  விண்வெளி வீரர்களும் 192 நாட்களுக்கு சுற்றுப்பாதையில் தங்கியிருந்தனர். அக்காலத்தில் அவர்கள் இரண்டு முறை விண்வெளிக் கலத்தை விட்டு வெளியேறி புதிய நேரச் சாதனையைப் படைத்துள்ளனர்.

 

You May Also Like

More From Author