நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஸ்ரீவாரியார் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் 120 வது பிறந்ததின விழா மற்றும் பத்தாம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது
அம்பை செங்குந்தர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற விமாவிற்கு விக்கிரம் சிங்கபுரம் பி.எல்.டபின் யூ.ஏ பள்ளி தலைமை ஆசிரியை மீனா தலைமை தாங்கினார்
பேராசிரியை கார்த்திகா ஆறுமுகம் எங்கும் தெய்வ மனம் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு அற்றினார்
முன்னதாக வாரியார் சுவாமிகளுக்கு குருபூஜை நடத்தப்பட்டது
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, 12ம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன
விழாவில் அறக்கட்டளை அறங்காவலர் மகாலிங்கம்
மீனாட்சிநாதன், ஆறுமுகம்
சுப்பிரமணியன் கணபதி பேராசிரியை கவிதா, ஆசிரியர் நாறும்பூநாதன் ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்
முடிவில் சங்கரசுப்பிரமணியன் நன்றி கூறினார்