சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்குப் பிறகு, எவரெஸ்ட் மற்றும் MDH உற்பத்தி செய்யும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது.
நேபாளத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையானது, இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடுக்கானப் பரிசோதனையை தொடங்கியுள்ளது என்று ANI தெரிவித்துள்ளது.
“எவரெஸ்ட் மற்றும் எம்.டி.ஹெச் பிராண்ட் மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது… சந்தையில் அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளோம். மசாலாப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் தடயங்கள் இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இது வந்துள்ளது” என்று நேபாள உணவு தொழில்நுட்பத்தின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் கூறினார்.