கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக இந்தியச் சந்தையிலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, 1,20,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
