பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை! 90 கி.மீ வேகத்தில் பறந்த ரயில்!

Estimated read time 1 min read

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. தண்டவாளத்தில் அதிர்வுகள் உள்ளதா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இனைப்பதில் முக்கிய பங்கு வைப்பது பாம்பன் ரயில் பாலம் 1914 பிப்.24ம் தேதி முதல் முதலாக ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. 100 வருடங்களுக்கு மேலாக ரயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் பழைய ரயில் பாலம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழைய பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்துவதற்கு முன்னதாகவே மத்திய அரசு பாம்பன் கடலில் புதிய பாலத்தை கட்டுவது என முடிவு செய்தது. இதற்காக 550 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணியை பாம்பன் கடலில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் துவங்கி தற்போது பாலம் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.

நான்கு வருடங்களாக நவீன வசதிகளுடன் பாம்பன் கடலில் 333 காங்கீரட் அடித்தளங்கள் 101 தூண்கள் 99 இணைப்பு கர்டர்களுடன் 37 மீட்டர் உயரம் 77 மீட்டர் நீளத்தில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு நடுவில் கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்ப செங்குத்து பாலத்துடன் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கப்பல் கடந்து செல்லும்போது செங்குத்து பாலம் லிஃப்ட் போன்று ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீ உயரத்திற்கு மேல்நோக்கி செல்லும், இதற்காக மையப்பகுதியில் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டு 700 டன் எடை உடைய செங்குத்து பாலம் பொருத்தி இந்த தூணின் மேல் பகுதியில் செங்குத்து பாலத்தின் கர்டரினை ஏற்றவும், இறக்கவும், வீல்கள் போன்ற இழுவை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கப்பல் பாலத்தை கடந்து செல்லும்போது நவீன கம்ப்யூட்டர் வசதிகளுடன் பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தை மூன்று நிமிடத்தில் உயர்த்தவும் இரண்டு நிமிடத்தில் இறக்கவும் புதிய செங்குத்து பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, ரயில் முதன்மை அதிகாரி ஒப்புதலுக்காக புதிய ரயில் பாலம் ரயில் போக்குவரத்தை தூங்குவதற்கு காத்திருக்கிறது. ரயில்வே முதன்மை அதிகாரி ஒப்புதல் வழங்கிய பின் இம்மாத இறுதிக்குள் ரயில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. தண்டவாளத்தில் அதிர்வுகள் உள்ளதா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author