நெல்லை நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, அன்னவாகன திருவீதி உலா நடைபெற்றது.
அன்னை காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாள் முதலில் சுவாமி நெல்லையப்பரிடம் திருப்பாவாடை பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடா்ந்து, புதியதாக செய்யப்பட்ட அன்னவாகனத்தில் எழுந்தருளினார்.
அன்னைக்கு மகா தீபாராதனையும் அதனைத் தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடைபெற்றது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தாிசனம் செய்தனர்.