கணிமை உள்கட்டமைப்பு கட்டுமானத்தை முன்னேற்றி, உண்மை பொருளாதாரத்துடன் எண்ணியல் பொருளாதாரத்தின் ஆழ்ந்த இணைப்பை ஊக்குவிக்கும் விதம், 2023ஆம் ஆண்டு சீன கணிமை உள்கட்டமைப்பு மாநாடு ஆகஸ்ட் 18, 19 ஆகிய நாட்களில் யின்சுவான் நகரில் நடைபெற உள்ளது.
இம்மாநாடு பற்றி சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஜுலை 17ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், கணிமை தொழிலுக்கான ஆதரவு வலுப்படுத்தப்பட்டு, கணிமை உள்கட்டமைப்பு கட்டுமானத்தின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கை ஆவணங்கள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டிலிருந்து, சீனாவின் தகவல் மையங்களில் பொருத்தப்பட்ட கணினிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 விழுக்காட்டுக்கு மேலான கூட்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்து வருகிறது. மேலும், சீனத் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு கழகத்தின் கணக்கீட்டின்படி, 2022ஆம் ஆண்டு சீனாவின் கணிமை தொடர்பான மையத் தொழில் அளவு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது.