சீன-மங்கோலிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Estimated read time 0 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மங்கோலிய வெளியுறவு அமைச்சர் பேட்ஜர்கல் அம்மையாருடன் ஜுன் 13ஆம் நாள் உலான்பாதர் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீனாவும் மங்கோலியாவும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். மங்கோலியாவுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை உயர்தரத்துடன் செயல்படுத்தி, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தி, பல்வேறு துறை ஒத்துழைப்புகளின் தரத்தையும் அளவையும் அதிகரிப்பதை முன்னேற்ற வேண்டும் என்றும், மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, மேலும் நியாயமான உலக ஆட்சிமுறையின் உருவாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author