நீட் மறுதேர்வால் தள்ளிப்போகிறதா தமிழக பொறியியல் கலந்தாய்வு? அமைச்சர் வெளியிட்ட முக்கியத் தகவல்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) கலந்தாய்வு தேதிகள் திட்டமிட்டபடி தொடங்காமல், சில நாட்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கக (DOTE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூன் 21 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெறவுள்ள நீட் மருத்துவ மறுதேர்வு காரணமாக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவானது (AICTE) தங்களுடைய பொறியியல் கலந்தாய்விற்கான இறுதி கால அட்டவணைக்கு இன்னும் முறையான ஒப்புதலை வழங்கவில்லை.
இதன் காரணமாக, மாநில உயர்கல்வித்துறை தற்பொழுது பொறியியல் கலந்தாய்வை தள்ளிவைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவது மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author