ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும், ரஷ்யா-உக்ரைன் போர் ஓயாமல் நடந்து கொண்டிருப்பது குறித்து விசாரிப்பதற்கும் பிரதமர் மோடி இன்று அந்த இரு தலைவர்களையும் தொடர்பு கொண்டார்.
இந்தியாவை சமாதானம் செய்யும் நாடாக ரஷ்யாவும் உக்ரைனும் பார்க்கிறது என்று இரு தலைவர்களும் இன்று கூறி இருக்கின்றனர்.
மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தங்கள் நாடுகளுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு இரு தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி கடைசியாக 2018ல் ரஷ்யா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.