மாலத்தீவின் சீன ஆதரவு அதிபர் முகமது முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
93 உறுப்பினர்களைக் கொண்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலில், அறிவிக்கப்பட்ட 86 இடங்களில், முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள ஏழு இடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், முய்ஸுவின் PNC பெரும்பான்மையான 47 இடங்களை விட 19 இடங்கள் அதிகமாகவே வெற்றி பெற்றுள்ளது.
முய்சுவின் கட்சிக்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றி, மாலத்தீவு மக்கள் ஜனாதிபதியின் சீன சார்பு, இந்தியா எதிர்ப்பு அரசியலை ஆதரிப்பதைக் குறிக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் பினாமியாக கடந்த செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜனாதிபதி முய்ஸு.